சவூதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியான நியோம் நகரத்திற்கான பிரத்தியேக விமானம் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விண்ணில் ஏறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சவூதி அரேபியாவின் நியோம் நகரத்திற்கான உத்தேசச் செலவு திட்டம் 500 பில்லியன் டொலர். இது, குவைத் அல்லது இஸ்ரேல் நாடுகளை விடப் பெரியது.
மேலும் இது சவூதி நீதித்துறையின் கீழ் வராத தன்னாட்சி பெற்ற அமைப்பால் நிர்வகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
“மிகவும் பிரம்மாண்டமான இந்தத் திட்டம்” பட்டத்து இளவரசரின் பசுமையான சவூதி அரேபியாவுக்கான தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும்.
26-வது காலநிலை உச்சி மாநாட்டின் காலநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவரும் சவூதி பசுமை முன்னெடுப்பைத் தொடங்கினார். 2060-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இலக்கை அறிவித்தார்.
இதற்கிடையில் விரைவில் கட்டப்படவுள்ள நியோம் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், தற்போதுள்ள ‘NEOM பே’ விமான நிலையத்திலிருந்து செயல்பாடுகள் தொடங்கும்.
NEOM ஏர்லைன்ஸின் எதிர்கால அணுகுமுறையானது பொருட்களை நீங்களே எடுத்துச் செல்வது, விசாவிற்கு விண்ணப்பிப்பது மற்றும் பிற “விமானப் பயணத்தின் சோதனைகள் மற்றும் இன்னல்கள்” ஆகியவற்றைக் கைவிட விரும்புவதாக, அதன் தலைமை நிர்வாக அதிகாரி கிளாஸ் கோர்ஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் வரவிருக்கும் விமான நிறுவனம் 6G Wi-Fi, ஒவ்வொரு இருக்கையிலும் பெரிய திரைகள், இருக்கையில் கேமிங் மற்றும் விமானத்தில் உள்ள பொழுதுபோக்கு தொழில்நுட்பம் ஆகிய வசதிகள் விமானத்தில் காணப்படும்.
இந்த புதிய எதிர்காலத்தை நாங்கள் சவூதி அரேபியாவின் வடமேற்கில் உருவாக்கி வருகிறோம் என்று கோர்ஷ் கூறினார்.
“பயணிகளின் பயணத்தை முடிந்தவரை தடையற்றதாக மாற்றுவதே குறிக்கோள். நாங்கள் ஒரே நேரத்தில் ஒரு புதிய இலக்கு, புதிய விமான நிலையங்கள் மற்றும் புதிய விமான சேவையை உருவாக்கி வருகிறோம் இதுவரை கண்டிராத அளவுக்கு இதை அடைய முடியும் என்ற உணர்வு உள்ளது என்றார்