சிங்கள தமிழ் புத்தாண்டின் போது அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்!

Date:

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால், சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற இறக்குமதி பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கடந்த சில தினங்களாக  அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டிருந்ததாகவும் இதன் பலன் நேரடியாக நுகர்வோருக்குச் செல்லும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இங்குள்ள பெரும்பாலான மக்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களையே உட்கொள்கின்றனர் என்றார்.

உருளைக்கிழங்கு, வெங்காயம், சீனி, பருப்பு மற்றும் மிளகாய் போன்ற நுகர்வோர் பொருட்கள் நேரடியாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.

டொலருடன் பரிவர்த்தனை செய்து இறக்குமதி செய்யப்படும் மற்ற அனைத்து முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விரைவில் குறையும் என்றும், அதன் பயனை நுகர்வோர் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...