ஜம்இய்யதுல் உலமா திஹாரி கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘ரமழான் வழிகாட்டல்’ கூட்டம்!

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா திஹாரி கிளையின் ஏற்பாட்டில், கடந்த 13 ஆம் திகதி ரமழான் வழிகாட்டல் என்ற தலைப்பில் லப்ஸன் திருமண மண்டபத்தில் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கும், இமாம்களுக்குமான விஷேடக் கூட்டம் நடைபெற்றது.

அஷ்ஷெய்க் ஸைபுல்லாஹ் இஹ்ஸானியின் தலைமையில் அஷ்ஸெய்க் அர்கம் காரியின் கிராஆத்துடன் கூட்டம் ஆரம்பமானதுடன் அஷ்ஷேக் இஜ்லான் நூரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதேவேளை இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் அம்ஜத் ரஷாதி ‘ஆலிம்களின் பணியும் சமூகத்தின் கடமைகளும்’ எனும் தலைப்பிலும் , அஷ்ஷெய்க் ஹஸன் பாரிஸ் மதனி  ‘அமானிதம் பேணுவோம்’ எனும் தலைப்பிலும், அஷ்ஷெய்க்  ஸைபுல்லாஹ் இஹ்ஸானி ‘ஜம்மியத்துல் உலமாவின் பணிகளும் எமது எதிர்கால நடவடிக்கைகள்’ எனும் தலைப்பிலும் விசேட உரைகள் நிகழ்த்தினார்கள்.

இதனைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றதுடன் கப்பாரத்துல் மஜ்லிஸுடன் நிறைவுபெற்றது.

Moulavi Ijlan (Noori)

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...