தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்குநீரிணையை நீந்தி கடந்து 7 பேர் சாதனை!

Date:

இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்குநீரிணையை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் ஒன்றாக நீந்திக் கடந்து 7 பேர் சாதனை படைத்துள்ளனர்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் அமைந்துள்ள திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சேர்ந்த பிரசாந்த் ராஜண்ணா, ராஜசேகர் துபரஹள்ளி, ஜெயப்பிரகாஷ் முனியல் பாய், அஜத் அஞ்சனப்பா ஆகிய 4 வீரர்களும் சுமா ராவ், சிவரஞ்சனி கிருஷ்ணமூர்த்தி, மஞ்சரி சாவ்ச்சாரியா ஆகிய 3 வீராங்கனைகளுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதுறையிலிருந்து 2 படகுகளில் நீச்சல் பயிற்சியாளர் சுஜேத்தா தேப் பர்மன் தலைமையில் மீனவர்கள் உட்பட 16 பேர் கொண்ட குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தலைமன்னார் நோக்கி பயணித்தனர்.

தலைமன்னாரிலிருந்து 13ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு கடலில் குதித்து நீந்த ஆரம்பித்த 7 பேரும் மாலை 3.45 அளவில் (10 மணி நேரம் 45நிமிடங்கள்) தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை அடைந்து சாதனை ஏட்டில் பதிவாகினர்.

இதற்கு முன்னர் தலைமன்னார் – தனுஷ்கோடி இடையிலான பாக்குநீரிணையை 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேனி மாவட்டத்தை ஆர். ஜெய் ஜஸ்வந்த் தனது 10 வயதிலும் 2022 ஆம் ஆண்டில் மும்பையைச் சேர்ந்த ஜியா ராய் என்ற ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி உள்ளிட்ட சிலர் குறைந்த வயதுகளில் நீந்தி கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...