இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ரணிதா ஞானராஜா வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் 2021 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச தைரியமான பெண்கள் விருதை ஏற்றுக்கொண்டார்.
அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், இலங்கையில் விளிம்புநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கும் பாதுகாப்பதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக 2021 இல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல சந்தேக நபர்களை விடுதலை செய்வதிலும் ஞானராஜா முக்கிய பங்காற்றினார்.
மோதலில் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பணியாற்றிய அவரது விரிவான அனுபவத்தின் அடிப்படையில், ஞானராஜா நீதி மற்றும் பொறுப்புக்கூறலில், குறிப்பாக இலங்கையின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக மிகுந்த ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.