நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மூடுவது அல்லது மறுசீரமைப்பது போன்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு நீண்ட கடன் வசதியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“இந்த ஒப்பந்தத்தின்படி, அனைத்து அரச பொதுத்துறை நிறுவனங்களும் நஷ்டம் அடைவதாக இருந்தால், நஷ்டத்தில் இயங்கும் தொழில் துறைகள் மூடப்படும். நாம் எவ்வளவு விரும்பினாலும், பிடிக்காவிட்டாலும், இலாபத்தை ஈட்ட முடியாது என்றால், அந்த தொழில்கள் மூடப்படும் நிலையில் நாம் உள்ளோம்.
செலவை ஈடுகட்ட முடியாவிட்டால் முன்னர் அரசு பணம் தருவார்கள். கடன் வாங்க முடியாவிட்டாலும் அரசு பணத்தினை அச்சடித்தாவது தருவார்கள். இனிமேல் இந்த இரண்டையும் செய்ய முடியாது. இந்த யதார்த்தத்தை எதிர்கொண்டு, CTB யை மீட்கும் திட்டம் இல்லாவிட்டாலும், அந்தத் துறையில் மூடப்படும் பகுதியானது தனியாருக்கு கொடுப்பதுதான் நடக்கும்.”