புத்தாண்டை முன்னிட்டு வீதியின் இருமருங்குகளிலும் வியாபாரம் செய்ய அனுமதி!

Date:

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் எந்தவொரு வீதியின் இருமருங்குளிலும் தங்களது உற்பத்திகளை விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட அனுமதி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது பிரதேச செயலகங்களில் அறிவித்த பின்னர் இடையூறின்றி தங்களது உற்பத்திகளை வீதியின் இருமருங்கிலும் பொது மக்கள் விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...