மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய மனித உரிமை ஆணைக்குழு நாளை மீண்டும் கூடுகின்றது !

Date:

வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் சமர்ப்பித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை மீண்டும் கூடவுள்ளது.

இது தொடர்பான விசாரணை நாளை காலை 10 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இந்த விசாரணை நடத்தப்பட்ட போதிலும் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் இந்த விசாரணையில் கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...