மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை நாளை!

Date:

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

“2020 மற்றும் 2021 ஆகிய இரண்டிலும் மாண்வர்கள் 60% இற்கு மேல் பாடசாலைக்கு வர முடியாததால், இந்த ஆண்டு நாங்கள் பாடசாலை விடுமுறைக்கு அதிக நாட்கள் கொடுக்கவில்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இயன்றளவு பாடசாலை நேரத்தை ஒதுக்குவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதுடன், கல்வியாண்டின் முதலாம் தவணையை திங்கட்கிழமை (27) ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து பாடசாலைப் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், மேன்முறையீடுகளை பரிசீலித்து பெரும்பாலான பாடசாலைகள் தரம் ஒன்று மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை செவ்வாய்கிழமை (28) மேற்கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“புதிய கல்வியாண்டு பொதுவாக ஜனவரியில் தொடங்க வேண்டும். ஆனால் முடிந்தவரை கொவிட்-19 காரணமாக தாமதமான கால அட்டவணையை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம். திட்டமிட்டபடி சரியான நேரத்தில் தேர்வுகளை நடத்தினோம்.

இப்போது இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். 2022 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு மற்றும் முடிவுகளை வெளியிடுவது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...