ரஷ்ய ஜனாதிபதி- உக்ரைன் ஜனாதிபதி நேரில் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமா?

Date:

ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. அதே வேளையில் நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் இராணுவம் ஓர் ஆண்டாக ரஷய படைகளை எதிர்த்து துணிவுடன் சண்டையிட்டு வருகின்றது.

ரஷ்ய படைகள் தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள பக்முத் நகரை கைப்பற்ற தீவிரம்காட்டி வரும் நிலையில் அங்கு இருநாட்டு இராணுவத்திற்கும் கடுமையான சண்டை நடந்து வருகின்றது.

இதனிடையே ரஷ்யாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் எதிர் தாக்குதலை நடத்த உக்ரைன் தயாராகி வருவதாகவும், அதற்கு பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தப்போரால், சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக திரண்டன. இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது.

போரை முடிவுக்கு கொண்டு வரும்படியும், பேச்சு நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்படியும் என பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடவுள்ளார்.

ஊடகங்களுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது…..

ஜனாதிபதி தேர்தலில் நான் வேட்பாளராக போட்டியிட உள்ளேன். ஜனாதிபதியாக நான் மீண்டும்தேர்வு செய்யப்பட்டால், முதற்கட்டாமாக ரஷ்ய ஜனாதிபதி , உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியையும் நேரில் வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தி 24 மணி நேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவேன். என்று அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...