வரும் காலங்களில் எரிபொருள் விலை குறைக்கப்படும்!

Date:

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது

அண்மைய நாட்களில் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதால், புதிய எரிபொருள் இருப்புக்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படும் சரக்குகள் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைப்பு ஏனைய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...