அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
சபையின் உறுப்பினர்கள் சுயேச்சையான அமைப்புகளுக்கான உறுப்பினர்களை நியமிப்பது மற்றும் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கூட்டத்தின் போது ஆலோசிக்கவுள்ளனர்.