விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள்!

Date:

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக 20 ஆயிரம் ஆசிரியர்கள் அவசியமாக உள்ள நிலையில், தற்போது 16 ஆயிரம் ஆசிரியர்களே இதுவரை பதிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

மேலும் நான்காயிரம் ஆசிரியர்களுக்கான குறைபாடு நிலவி வருகிறது. அதனால் மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கேட்டுக் கொண்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று(09) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...