நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, வான்படை முகாமில் கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட வான்படை அதிகாரிகள் வெளியேறும் அணிவகுப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்க அனைத்து நாடுகளின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வீதிகளில் இறங்குவதால் ஆட்சி மாற்றம் சாத்தியப்படப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.