ஸ்கொட்லாந்தின் புதிய பிரதமராக பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஹம்சா யூசுப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நிக்கோலா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த 37 வயதான ஹம்சா யூசுப்பிற்கும் நிதியமைச்சராக இருக்கும் கேட் போர்ப்சுக்கும் இடையே போட்டி நடந்தது.
இதில் ஹம்சா யூசுப் வெற்றி பெற்றறதையடுத்து நேற்று ஸ்காட்லாந்து பிரதமருக்கான பிரத்யேக மாளிகையான ப்யூட் ஹவுஸில் அவர் குடியேறிய கையோடு தனது குடும்பத்தினருக்கு ரமழான் தராவீஹ் தொழுகை நடத்தி தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
ஸ்காட்லாந்து சரித்திரத்தில் வெள்ளையினம் சாராத ஒருவர் பிரதமர் பதவிக்கு வருவது இதுவே முதல்முறை.
அங்கு பாகிஸ்தான் வம்சாவளியினர் பலரும் அரசியல் களங்களில் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.