அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

Date:

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளியும் சட்டத்தரணியுமான அலெஸ் பியாலியாட்ஸ்கி, பெலாரசில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1980-களில் நடைபெற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் ஆவார்.

பெலாரசில் ஜனநாயகம் வலுப்படவும் அமைதி வழியில் முன்னேற்றம் ஏற்படவும் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவரான இவர், கடந்த 1996-ம் ஆண்டு ‘வியாஸ்னா மனித உரிமைகள் மையம்’ என்கிற பெயரில் மனித உரிமை அமைப்பு ஒன்றை தொடங்கினார்.

இந்த அமைப்பு அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதி மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் பெலாரசின் ஜனாதிபதியாக இருந்து வரும் அலெக்சேண்டர் லுகாஷென்கோ, கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, தேர்தலில் முறைகேடு செய்து ஜனாதிபதியானதாக அலெக்சேண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக நாட்டில் மாபெரும் போராட்டம் வெடித்தது. பல மாதங்கள் நீடித்த இந்த போராட்டம் பெலாரசை அதிரவைத்தது.

இந்த போராட்டத்தை இரும்புகரம் கொண்டு ஒடுக்கிய அரசு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தது.

இதனிடையே அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்கு நிதியுதவி செய்ததாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் அலெஸ் பியாலியாட்ஸ்கி மீது வழக்கு தொடரப்பட்டது.

அதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

ஆனால் அதை பொருட்படுத்தாத பெலாரஸ் அரசு அலெஸ் பியாலியாட்ஸ்கி மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

இதற்கிடையில் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் சர்வதேச அளவில் கவனம் பெற்றார்.

இந்த நிலையில் அலெஸ் பியாலியாட்ஸ்கி மீதான வழக்கை விசாரித்து வந்த பெலாரஸ் நீதிமன்றம் நேற்று அவரை குற்றவாளியாக அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...