மிரிஹானவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அறகலய செயற்பாட்டாளர்கள் இன்று நுகேகொடை ஜூபிலி போஸ்ட்டில் அறகலயத்தின் முதலாம் ஆண்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், மிரிஹான பகுதிக்கு மேலதிக பொலிஸ் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேநேரத்தில், அப்பகுதியில் ஆயுதப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து அரகலய வெளியேற்றி முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரி அறகலய செயற்பாட்டாளர்கள் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.