இத்தாலியில் இலங்கையர்களுக்கு பல தொழில் வாய்ப்பு!

Date:

ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகள் மற்றும் இலங்கை என்பவற்றின் பணியாளர்களை இத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக இணைத்து கொள்வதற்காக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

இணையத்தளம் ஊடாக இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 87,702 தொழிலுக்கான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

கனரக வாகன சாரதிகள், கட்டுமான தொழில்துறையினர், உணவக துறை, மின்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளில் தொழில்வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இத்தாலிய அரசாங்கத்தின் பின்வரும் வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இது பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

http://www.gazzettaufficiale.it/eli/id/2023/01/26/23A00232/sg

இதேவேளை விண்ணப்பதாரர்கள் இந்த வேலை வாய்ப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
இந்த வேலைத்திட்டத்தின்படி எவருக்கும் இத்தாலியில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு பணம் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும், அவரின் தனிப்பட்ட தலையீட்டின் மூலம் இந்த வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

மார்ச் 27, காலை 9:00 மணி முதல் https://www.anpal.gov.it/assumere-lavoratori-non-comunitari-anno-2023 என்ற இணையதளத்திற்குச் சென்று இந்தப் பணிகளுக்கு ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...