இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு வர்த்தக அமைச்சு பொறுப்பேற்கிறது!

Date:

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் முட்டை கையிருப்புக்கு முழுப்பொறுப்பேற்பதாக  வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவும் பிரதேசத்தில் இருந்து இந்த நாட்டுக்கு முட்டைகள் கையிருப்பு அனுப்பப்பட்டுள்ளதாக முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி.குணரத்ன தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைக் கையிருப்புகளுக்குத் தேவையான அனைத்து தரச் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு முட்டைகளை கொண்டு வந்த பின்னர், சந்தைக்கு வெளியிடும் போது இது தொடர்பான அனைத்து தரச் சான்றிதழ்களையும் முன்வைப்பதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...