அரச வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி ஹலாவத்த கபெல்வல ஸ்ரீ ரதனசிறி விகாரையில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச வெசாக் விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.
அதற்கமைய இந்த வருடத்தின் வெசாக் தொனிப்பொருளானது “உனக்கே விளக்காக இரு” என்பதாகும்.
வெசாக் வாரம் மே மாதம் 02 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.