இன்று மாலை இயக்கப்படவுள்ள ரயில் சேவைகள்!

Date:

ரயில்பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (15) பிற்பகல் 9 புகையிரதங்கள் மாத்திரம் இயங்கும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.

இதன்படி, பிரதான மற்றும் வடக்கு வழித்தடங்களில் 4 புகையிரதங்களும், கரையோர மற்றும் புத்தளம் மார்க்கத்தில் தலா 2 புகையிரதங்களும், களனிவெளி பாதையில் ஒரு புகையிரதமும் சேவையில் ஈடுபடவுள்ளதாக பிரதிப் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டையில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு ரம்புக்கனை, கண்டிக்கு மாலை 5.10 மணிக்கும், கனேவத்தைக்கு மாலை 4.40 மணிக்கும், மஹவவிலிருந்து மாலை 6.00 மணிக்கும் பிரதான பாதையில் புறப்படும்.

சாகரிகா எக்ஸ்பிரஸ் ரயில் மருதானையில் இருந்து பெலியத்த வரை கரையோரப் பாதையிலும் மாலை 5.25 மணிக்கும் காலி வரையிலும், புத்தளம் மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து ஹலவத்தை வரை மாலை 4.30 மற்றும் 5.30 க்கும், களனிவெளி மார்க்கத்தில் அவிசாவளைக்கு மாலை 5.00 மணிக்கும் இயக்கப்படும்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...