அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த மூன்று நாட்களாக சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும், கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.