சர்வதேச நாணய நிதியத்தின் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களின் முதல் தவணை இலங்கைக்கு இன்று கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.
IMF நிதியை நாட்டின் தேவைக்காகப் பயன்படுத்துவதற்காக திறைசேரிக்கு மாற்றுவதற்கு IMF அனுமதி வழங்கியுள்ளது.
அதேசமயம் IMF நிதிகளை மத்திய வங்கியின் டொலர் கணக்கில் மாத்திரமே வைப்பு செய்ய முடியும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.