உலகெங்குமுள்ள பெரும்பாலான நாடுகளில் இன்று வியாழக்கிழமை ரமழான் நோன்பு ஆரம்பமானது.
அந்தவகையில், சவூதி அரேபியாவில் ரமழான் தலைப்பிறை தென்பட்டதை தொடர்ந்து ரமழான் மாத ஆரம்பம் அறிவிக்கப்பட்டது.
அநேகமான அரபு நாடுகளும், சவூதியின் அறிவிப்பை ஏற்றுக்கொள்ளும் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் வாழும் முஸ்லிம்களும், உலகெங்கும் சர்வதேச பிறையை அடிப்படையாகக் கொண்டு நோன்பு நோற்கின்றனர்.
அதற்கமைய சவூதி, பலஸ்தீன் அல்அக்ஸா, பாகிஸ்தான், இந்தியா டுபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் புதன்கிழமை சூரிய அஸ்தமனத்தில் தொடங்கியது.
ஒவ்வொரு நாடும் பிறை பார்க்கும் குழுவைக் கொண்டிருந்தாலும், இஸ்லாமிய உலகம் பொதுவாக ரமழான் மற்றும் பிற மத விடுமுறைகளைத் தீர்மானிக்க சவூதி அரேபியாவையே நாடுகின்றன.
மேலும், குவைத், எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், எகிப்து, லெபனான், பலஸ்தீனம் மற்றும் துனிசியா உள்ளிட்ட பிற நாடுகள், வியாழக்கிழமையை புனித மாதத்தின் முதல் நாளாக நோன்பை ஆரம்பித்தார்கள்.