உலகின் மிக ஆடம்பரமான நட்சத்திர விடுதியின் ஒரு நாள் வாடகை குறித்த தகவல்!

Date:

சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற துபாய்க்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

ஓராண்டில் சுமார் 70 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக அந்த நாட்டின் சுற்றுலாத்துறை கூறுகின்றது.

இந்த நாட்டின் சுற்றுலா இடங்களில் உலகின் உயரமான கட்டிடம் என கூறப்படும் புர்ஜ் கலீபாவுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வரிசையில் தற்போது ‘அட்லாண்டிஸ் தி ராயல்’ என்ற நட்சத்திர விடுதியும் சேர்ந்துள்ளது.

இந்த விடுதியின் நுழைவாயில் முதல் குளியல் அறையில் உள்ள சோப்பு வரை எல்லாமே உலகிலேயே விலை உயர்ந்தவை ஆகும்.

இந்த நட்சத்திர விடுதியில் உள்ள அறையின் ஒரு நாள் வாடகையாக 1,000 டாலர் (சுமார் ரூ.82 ஆயிரம்) முதல் 1 லட்சம் டாலர்( ரூ.82 லட்சம்) வரை வசூலிக்கப்படுகிறது.

தற்போது இதுவே உலகின் ஆடம்பர நட்சத்திர விடுதியாக விலங்குவதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...