(Photos: TRT World)
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்திற்குத் தயாராகி வருகின்றனர்.
அதற்கமைய ரமழான் மாதத்தை முன்னிட்டு தெருக்களை அலங்கரிப்பதன் மூலமும், அந்த மாதத்தில் தயாரிக்கப்பட்ட மற்றும் உட்கொள்ளப்படும் உணவுகளை வாங்குவதன் மூலமும் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தேசியம், இனம், அல்லது நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கிறார்கள்.
இந்நிலையில் லண்டன், இஸ்ரேல், பாகிஸ்தான், எகிப்து, இந்தோனேஷியா, பலஸ்தீன், போன்ற நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் ரமழான் மாதத்திற்கு தயாராகும் புகைப்படங்களை சர்வதேச ஊடகமான TRT World வெளியிட்டுள்ளதை காணலாம்.