உள்ளூராட்சி தேர்தலை தாமதமின்றி நடத்துமாறு புத்தசாசன நிறைவேற்றுக் குழு ஜனாதிபதிக்கு கடிதம்

Date:

நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும் என கூறி புத்தசாசன நிறைவேற்றுக் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

குறித்த கடிதத்தில் 01. அமைச்சர்களின் எண்ணிக்கையை 15 ஆக மட்டுப்படுத்தி இராஜாங்க அமைச்சர்களை நீக்குதல்.

02. அமைச்சுகளின் நிர்வாகத்தை செயலாளர்களின் கீழ் கொண்டு வருவதுடன், அரச நிகழ்வுகள் அனைத்தையும் இரத்து செய்தல்.

03. சகல ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியையும் நிறுத்தி, அமைச்சுத் திணைக்களங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களிலும் தற்போது மேற்கொள்ளப்படும் அத்தியாவசியமற்ற செலவுகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.

போன்றவற்றின் மூலம் தேர்தலுக்கான நிதியை சேமிக்க முடியும் என்பதே புத்தசாசன நிறைவேற்றுக் குழுவின் கருத்தாக அமைந்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...