ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

Date:

நகர அபிவிருத்தி அதிகார சபையானது, தனியார் துறையின் பங்காளிப்புடன் தனது வருமானத்தை கவனமாக நிர்வகித்து, நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு அரசின் நிதி பயன்படுத்தப்படாது என்றும், ஒழுங்கமைக்கப்படாத நகர்ப்புற அபிவிருத்தி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு நாட்டின் அபிவிருத்தியை பாதிக்கிறது என்றார்.

எனவே, நாட்டின் அனைத்து நகரங்களையும் விரைவாக மேம்படுத்துவதற்கான அரச திட்டத்தை செயற்படுத்தும் பாரிய பொறுப்பு நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் கீழ் நாடு முழுவதும் 100 நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய வேலைத்திட்டம் 2020 இல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், 100 பின்தங்கிய நகரங்கள் கண்டறியப்பட்டு, ஒவ்வொரு நகரத்தையும் அழகுபடுத்துவதற்காக அவற்றின் அடிப்படை வசதிகள் மற்றும் பொருத்தமான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியது.

அதன்படி, நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய 116 நகரங்கள் இத்திட்டத்தை ஆரம்ப கட்டத்தில் தொடங்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒவ்வொரு நகரத்தின் அபிவிருத்திக்கும் 20 மில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டது.

தற்போது இந்த 116 நகரங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன மற்றும் அடிப்படை பொதுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நடைபாதைகள், வடிகால் அமைப்புகள், பயணிகள் தங்குமிடங்கள் மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் 116 நகரங்களில் சிறந்த நகரத்தை தெரிவு செய்வதற்கான போட்டி நடாத்தப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்தகண்டிய நகர அபிவிருத்தி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இரண்டாவது இடத்தை இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட நகரமும், மூன்றாம் இடத்தை களுத்துறை மாவட்டத்தின் மொரகஹஹேனவும் பெற்றன.

நகர்ப்புற மேம்பாட்டின் மூலம் ஒரு நாட்டில் பெருமளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.நகர அலங்காரத்தில் பணத்தை முதலீடு செய்வது பயனற்றது என சிலர் சொன்னார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், நகரத்தை அழகுபடுத்துவதன் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முடியும். நகரத்தில் வசிக்கும் மக்களின் தூய்மையை மேம்படுத்துவது மட்டுமின்றி, பல்வேறு தொற்று நோய்களுக்கு எதிரான பாதுகாப்பும் ஏற்படும்” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...