ஒஸ்கார் விருதை வென்றது ‘நாட்டு நாட்டு’ பாடல்!

Date:

சிறந்த பாடலுக்கான ஒஸ்கார் விருதை RRR திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் வென்றுள்ளது.

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர் (RRR)’ திரைப்படம் உலகம் முழுவதும் 1,200 கோடியை வசூலித்திருந்தது.

இப்படத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியாபட், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார்.

இதேவேளை, நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட “தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” என்ற குறு ஆவணப்படம் ஒஸ்கார் விருதை வென்றுள்ளது.

முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த குறு ஆவணப்படம்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...