ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதி தண்டனை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்: ஜனாதிபதி

Date:

ஓரினச்சேர்க்கை தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், இந்த விதியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மார்ச் 24ஆம் திகதி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினால் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட நேர்காணலின் போது ஓரினச்சேர்க்கை உரிமைகள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது நமது சட்டத்தின்படி வினோத உரிமைகள் பற்றிய  கேள்வியில், ஓரினச்சேர்க்கை தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும், ஆனால் கடந்த ஐந்து தசாப்தங்களாக அது செயல்படுத்தப்படவில்லை. நிச்சயமாக, அரசாங்கம் அந்த சட்டத்தை செயல்படுத்தாது’ என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

மேலும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இது தொடர்பில் விவாதித்து வருகிறது,  இந்த தண்டனைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான   பெரும்பாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதை நான் அறிவேன், ஒரு கட்டத்தில் அவர்கள் தீர்மானம், சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருவார்கள், ”என்று அவர் கூறினார்.

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...