கொழும்பில் இன்று பிற்பகல் 2 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு!

Date:

கொழும்பில் இன்று 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று(4) பிற்பகல் 2 மணிமுதல், நாளை(5) பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியினுள் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு 1,2,3,4,7,8,9,10 மற்றும் 11 வரையான பகுதிகளுக்கும், கடுவலை நகரம் அதனை அண்டிய பகுதிகளுக்கும் இவ்வாறு நீர்விநியோகம் தடைப்படவுள்ளது.

அத்துடன், கொலன்னாவை நகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களுக்கும், வெல்லப்பிட்டி, கொட்டிகாவத்தை பகுதிகளுக்கும் குறித்த காலப்பகுதியில் நீர்விநியோகம் தடைப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...