சந்தையில் முட்டைக்கான தட்டுப்பாடு அதிகரிக்கக் கூடும்!

Date:

இறக்குமதி மூலம் சந்தையில் முட்டைக்கான தட்டுப்பாடு அதிகரிக்கக் கூடும் என  அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை அந்த தொகைக்கு சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முட்டை உற்பத்தியாளர்கள் தாய் கோழிகளை முட்டை உற்பத்திக்காக பயன்படுத்தாது இறைச்சிக்காக விற்பனை செய்யும் வர்த்தகத்தில் அதிக ஆர்வம் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இதன் காரணமாக முட்டைக்கான தட்டுப்பாடு வலுவடையக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் மேலும் ஒரு தொகுதி முட்டைகள் நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அரச வணிக பல்சார் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி 10 மில்லியன் முட்டைக்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...