கொழும்பில் உள்ள சவூதி அரேபியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு காலிமுகத்திடல் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.
சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதுவர் காலித் ஹமூத் அல் கத்தாணி தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில், முதன்முறையாக இலங்கையில் உள்ள ஈரானியத் தூதுவர் கலந்து கொண்டிருந்தார்.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் எனப் பெருந்தொகையானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உறவு மீண்டும் மலரத் தொடங்கியதையடுத்து சவூதி அரேபிய, ஈரான் நிகழ்வுகளில் இருநாடுகளின் இராஜ தந்திரிகள் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.