சுற்றாடல் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில் கடற்கரையை சுத்தம் செய்ய புதிய இயந்திரங்கள் !

Date:

இலங்கையின் கரையோரப் பகுதியில் சுற்றாடல் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இன்று (12) உத்தியோகபூர்வமாக ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

கரையோரங்களில் இருந்து குப்பைகளை அகற்ற இயந்திரங்களைப் பயன்படுத்துவதையும் இந்த வேலைத்திட்டம் உள்ளடக்கியது, மேலும் இதன் ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்குளியில் உள்ள காக்கை தீவு கடற்கரையில் நடைபெற்றது.

கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, சுற்றாடல் பொலிஸ், இலங்கை கடற்படை மற்றும் துடாவே பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

இதன்போது கருத்துத் தெரிவித்த சாகல ரத்நாயக்க, இலங்கை அழகிய கடற்கரைகள், சூழல் மற்றும் கலாசார பாரம்பரியம் காரணமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. எனவே, அடுத்த தலைமுறைக்கு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், கடற்கரையையும் பாதுகாப்பதன் மூலம் சுற்றுலாத் துறைக்கு பங்களிப்பது அனைவரின் பொறுப்பு என்றார்.

 

Popular

More like this
Related

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...