அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு இன்று மேலும் சரிவைச் சந்தித்துள்ளது.
தனியார் மற்றும் அரச வங்கிகளில் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 330 ரூபாவாகவும் விற்பனை விலை 345 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த இரு வாரங்களில் சடுதியாக அதிகரித்திருந்தது.
எனினும், நேற்றையதினம் சிறு வீழ்ச்சி பதிவானதுடன், இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.