தனது வீடு எரிக்கப்பட்டமை குறித்த விசாரணை தாமதம்: கவலையுடன் கடிதம் அனுப்பிய அமைச்சர்!

Date:

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது உடுகம்பலையில் உள்ள தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டினை விசாரணை செய்வதில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கவலை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விரைவில் ஆஜராகுவதற்கான திகதி மற்றும் நேரத்தை வழங்குமாறு நான்கு தடவைகள் எழுத்து மூலம் கோரியுள்ளதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கான சந்தர்ப்பத்தை விரைவில் வழங்குமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தனது கடிதத்தில் மேலும் கோரியுள்ளார்.

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டில்!

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர்...

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி: பாகிஸ்தான் உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கைப்பற்றக் கோரும்...

2026 தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை

2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை...