உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு, குறித்த தினங்களில் நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகளை இம்மாதம் 28, 29,30 மற்றும் 31ஆம் திகதிகளில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.
இதன் காரணமாக தபால் மூல வாக்குச் சீட்டுகள் இன்று (21ஆம் திகதி) மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் தபால் நிலையத்தில் கையளிக்கப்படவிருந்த போதிலும், திறைசேரியில் இருந்து பணம் செலுத்தப்படாத நிலையில்இ தபால் மூல வாக்குச் சீட்டுகள் தேர்தல் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.
இவ்வாறான நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் தொடர்ந்தும் பிற்போடப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.