தாய்வான் எல்லையில் போர் பதற்றம் : 25 போர் விமானங்களை அனுப்பிய சீனா!

Date:

1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தாய்வானை, சீனா இன்னும் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகின்றது.

இந்த சூழலில் சமீபகாலமாக தாய்வானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருகின்றது. சீனாவுக்கு கடும் கோபத்தை அமெரிக்கா ஏற்படுத்தி வருகின்றது.

இதனால், தேவை ஏற்பட்டால் தாய்வான் மீது படையெடுத்து அதனை ஆக்கிரமிப்போம் என சீனா மிரட்டி வருகின்றது.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே இருநாடுகளுக்கும் இடையே கடுமையான போர்ப்பதற்றம் நீடித்து வருகின்றது.

இந்த நிலையில் தாய்வானை மிரட்டும் விதமாக சீனா நேற்று 25 போர் விமானங்களை தாய்வான் எல்லைக்குள் அனுப்பியது.

இது குறித்து தாய்வான் இராணுவ அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,

‘இன்று காலை 6 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்குள் சீன இராணுவத்துக்கு சொந்தமான குண்டுவீச்சு விமானங்கள் உள்பட 25 போர் விமானங்கள் தைவானுக்குள் அத்துமீறி ஊடுருவின.

மேலும் 3 போர்க்கப்பல்களும் தைவானின் நீர்பரப்புக்குள் நுழைந்தன.

அதை தொடர்ந்து நிலைமையை கண்காணிக்க தாய்வான் இராணுவம் போர் விமானங்களையும், போர் கப்பல்களையும் அனுப்பி வைத்தது’ என கூறப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த அடாவடியால் இருநாடுகளுக்கு இடையில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...