திருமண வீட்டில் மோதல்: ஒருவர் பலி – ஐவர் படுகாயம்!

Date:

அங்குருவாதொட்ட – படகொட சந்தியில் நேற்று (17) இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த 36 வயதுடைய மங்கள பிரேமவர்தன என்ற நபரின் சடலம் இன்று அதிகாலை படகொடை வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் காயமடைந்த இரு குழுக்களைச் சேர்ந்த 5 பேர் கொழும்பு, நாகொட மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படகொட பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக படகொட சந்தியில் இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

அங்குருவாதொட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...