துணிச்சலுக்கான சர்வதேச விருதை பெற்றார் ரணிதா ஞானராஜா

Date:

இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ரணிதா ஞானராஜா  வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் 2021 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்  சர்வதேச தைரியமான பெண்கள் விருதை ஏற்றுக்கொண்டார்.

அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், இலங்கையில் விளிம்புநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கும் பாதுகாப்பதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக 2021 இல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல சந்தேக நபர்களை விடுதலை செய்வதிலும் ஞானராஜா முக்கிய பங்காற்றினார்.

மோதலில் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பணியாற்றிய அவரது விரிவான அனுபவத்தின் அடிப்படையில், ஞானராஜா நீதி மற்றும் பொறுப்புக்கூறலில், குறிப்பாக இலங்கையின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக மிகுந்த ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...