நல்லிணக்க அடிப்படையில் சீனத் தூதரகத்தால் ஏழை முஸ்லிம்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

Date:

இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் நல்லிணக்க முறையில் ஏழை முஸ்லிம்களுக்கு சுமார் 600 உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.

இதனை விநியோகிக்கும் நிகழ்வு  நேற்று கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.

Faxian அறக்கட்டளைத் திட்டத்தின் கீழ், ஏழு சீனக் கோயில்கள் மற்றும் பக்தர்களிடமிருந்து 50,000 பெட்டிகள் உலர் உணவுகள் பொதிகள், அனைத்து சமூகங்களைச் சேர்ந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து தெரிவிக்கையில்,

கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Faxian தொண்டு திட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன், இது ஏழு சீன கோவில்கள் மற்றும் பக்தர்களிடமிருந்து இலங்கையிலுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக இந்த உலர் உணவுப் பொதிகள் கிடைக்கபெற்றுள்ளன என தெரிவித்தார் .

இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சருடன் பங்குபற்றிய சீனத் தூதுவர் Qi Zhenhong, சீனாவில் இருந்து பௌத்தர்கள் மற்றும் ஆலயங்களில் இருந்து இந்த நன்கொடைகள் இலங்கை நாட்டில் உள்ள தகுதியான மக்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தகுதியான குடும்பங்களுக்கு சுமார் 600 உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் ரிஸான் ஹுசைன் தெரிவித்தார்.

இப் பொதிகள் பிற சமூகத்தினரிடையேயும் உரிய காலத்தில் விநியோகிக்கப்படும். “இது ரமலான் நேரம் என்பதால், முஸ்லிம்கள் முதல் பயனாளிகள் ஆனார்கள் என்று கூறினார்.

Popular

More like this
Related

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...