நாடு முழுவதும் வேலை நிறுத்தம்: வங்கிகள்,மருத்துவமனைகள் ஸ்தம்பித்தன!

Date:

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து துறைமுகம், எண்ணெய், மின்சாரம், வங்கிகள் போன்ற பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று (01) சுகயீன விடுப்பில் ஈடுபட்டுள்ளதுடன், போராட்டங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 40 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீர், வங்கிகள், ரயில்வே, பல்கலைக்கழகங்கள், தொலைத்தொடர்பு மற்றும் பிற துறைகளில் உள்ள தொழிற்சங்கங்களும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் இணைந்து கொள்கின்றன.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக மருத்துவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், தபால் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் தாம் வேலைநிறுத்தம் செய்யவில்லை, கறுப்பு அணிந்து கடமைக்கு சமூகமளிப்போம், மதிய உணவு இடைவேளையின் போது போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆசிரியர்கள், அதிபர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்படி இன்று பல நிறுவனங்களின் பணியாளர்கள் கறுப்பு உடை அணிந்து கடமைக்கு வந்தனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மாத்திரம் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அதன் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ரயில்வே தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...