நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக அனைத்து ரயில் நிலையங்களிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அரச நிறுவனங்களில் ஊழியர்களின் வருகை குறைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 10 அலுவலக தொடருந்துகள் இயக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கரையோரப் பாதையில் நான்கு தொடருந்துகளும் புத்தளம், களனி மற்றும் பிரதான பாதையில் தலா இரண்டு தொடருந்துகளும் கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்டதாக வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.
இவ்வாறு இயங்கிய சில தொடருந்துகளுக்கு இராணுவப் பாதுகாப்பும் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் மருந்து விநியோகம் உட்பட மருத்துவ மற்றும் ஆய்வக நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன.