நாட்டில் தங்கத்தின் இன்றைய நிலவரம்!

Date:

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 635,893 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு ஏற்ப தங்கத்தின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்ந்துள்ளதன் காரணமாக தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.

டொலரின் மதிப்பு சரிந்ததால் தங்கப் பவுணிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலையில் மேலும்  அதிகரிப்பு பதிவாகியுள்ளது, அதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 179,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 164,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,100 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...