நாட்டில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பற்ற முறையில் வாழ்கின்றனர்!

Date:

பல்வேறு காரணங்களால் சுமார் 343,000இற்கும் மேற்பட்ட சிறார்கள் பாதுகாப்பற்ற முறையில் நாட்டில் வாழ்வதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள மொத்த சிறார்களின் 10 வீதமானோர் இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் வசிப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொருளாதார மற்றும் பல்வேறு சமூக காரணங்களால் சிறுவர்கள் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான சிறுவர்கள் அநாதை இல்லங்களுக்கு செல்வதைத் தடுப்பதற்கும் வேறு மாற்று முறைகள் மூலம் அவர்களை பராமரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய மாற்று பாதுகாப்பு அமைப்பின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...