பங்களாதேஷ் ரோஹிங்யா அகதிகள் முகாமில் பாரிய தீ விபத்து: திட்டமிட்டு தீ வைக்கப்பட்டதா?

Date:

பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் கடந்த 5ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்து திட்டமிட்ட நாசவேலை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மியன்மாரின் ரோஹிங்யா அதிகள் தங்கியிருந்த அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீயினால் சுமார் 2,000 குடியிருப்புகள் அழிவடைந்துள்ளன.

இதனால் சுமார் 12,000 பேர் தங்குமிடங்களை இழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குட்டுபலோங் நகரிலுள்ள அகதிகள் முகாமில்  நேற்று பிற்பகல் இத்தீ பரவ ஆரம்பித்தது.

இத்தீயினால் 2000 குடியிருப்புகள் தீக்கிரையாகி அழிந்துள்ளதாகவும், 12,00 பேர் தங்குமிடங்களை இழ்தநிலையில் இடம்பெயர்ந்துள்ளதாகவும் பங்களாதேஷின் அகதிகள் ஆணையாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறைந்தபட்சம் 35 பள்ளிவாசல்கள் மற்றும் 21 கற்கை நிலையங்களும் தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி அகதிகளில் பெரும்பாலானோர், மியன்மாரின் ராகைன் மாநிலத்திலிருந்து வன்முறைகள் காரணமாக 2017ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தவர்கள் ஆவர்.

2021 ஜனவரி முதல் 2022 டிசெம்பர் வரை ரோஹிங்யா அதிகள் முகாமில் 222 தீப்பரவல் சம்பவங்கள் இடம்பெற்றதாக பங்களாதேஷ் பாதுகாப்பு அமைச்சு கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

இவற்றில் 60 சம்பவங்களில் வேண்டுமென்றே தீ மூட்டப்பட்டிருந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் விளைவாக, இந்த முகாம் உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம்களில் ஒன்றாகும் 4 அல்லது 5 அகதிகள் ஒரு குடும்பம் என்பதுடன் அகதிகளில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...