போராட்டத்திற்கு ஆதரவளிக்காத நோயாளர்களின் நலன்கருதி செயற்பட்ட சுகாதார சேவையாளர்களை பாராட்ட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, பணிப்புறக்கணிப்பின் போது கடமையில் இருந்த மருத்துவர்கள் முதல் சிற்றூழியர்கள் வரையான விபரங்கள் திரட்டப்படவுள்ளன.
அதனை அடுத்து அவர்களுக்கான பாராட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.