கொழும்பில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை தாக்குதல்களில் சிக்கி பல பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் நேற்றைய தினம் (07) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைப்பதற்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகித்ததை எதிர்த்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டது.
கேம்பிரிட்ஜ் பிளேஸில் இன்றும் போராட்டக்காரர்கள் நுழைந்ததையடுத்து, அவர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை போலீசார் பயன்படுத்தினர்.
எவ்வாறாயினும், கொழும்பு கேம்பிரிட்ஜ் பிளேஸுக்கு அருகில் பொலிஸாரின் கண்ணீர்ப்புகைத் தாக்குதலுக்கு பல இளம் பாடசாலை மாணவர்கள் இலக்காகி உள்ளனர்.
கண்ணீர்ப்புகைத் தாக்குதலுக்கு மத்தியில் பள்ளிக் குழந்தைகள் இருமல் மற்றும் கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளாகியதை அடுத்து அவர்கள் மீண்டும் அருகிலுள்ள பாடசாலைக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.