தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருபதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப்போவதாக உலகத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் மீண்டும் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்நிலையில் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த நெடுமாறன், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் இலங்கை தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
அவர் உயிருடன் இருக்கிறார் என்ற ஆதாரத்தை நாங்கள் வெளியிட விரும்பினால் உங்களை அழைத்தே நாங்கள் கூறுவோம் என தெரிவித்தார்.
மேலும் எனக்கு அதுகுறித்த ஆதாரம் கிடைத்தால் நிச்சயம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அதை வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.