இஸ்ரேலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய நீதித்துறை மறுசீரமைப்பு திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நீதித்துறையில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் நீதித்துறை சுதந்திரத்தை குறைப்பதுடன், ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்ப பிரதமர் சட்டத்தை திருத்தி இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, 10வது வாரமாக அங்கு போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், தலைநகர் டெல் அவிவில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
சனிக்கிழமையன்று நாடு முழுவதும் 5 இலட்சம் ஜனநாயக சார்பு போராட்டக்கார்கள் பங்கேற்றனர் என்றும் இது வரலாற்றில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இஸ்ரேலில் நீதித்துறையை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர, அதிபர் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சர்வதேச பெண்கள் தினமான நேற்று, ஆயிரக்கணக்கான பெண்கள் சிவப்பு உடை அணிந்து டெல் அவிவ் நகரில் பேரணியில் ஈடுபட்டனர்.
திட்டத்தை இஸ்ரேல் அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என பேரணியில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர். இதில் எந்த சமரசமும் இல்லை என்றும் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.